4 திரைப்படப் பிரிவுகளை இணைக்க செய்தி, ஒலிபரப்புத் துறை திட்டம்

தனது கட்டுப்பாட்டிலுள்ள 4 திரைப்படப் பிரிவுகளை ஒன்றிணைக்க மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

தனது கட்டுப்பாட்டிலுள்ள 4 திரைப்படப் பிரிவுகளை ஒன்றிணைக்க மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அந்த அமைச்சகத்தின்கீழ் இயங்கி வந்த கள பிரசார இயக்ககம், இசை, நாடகப் பிரிவு, விளம்பரங்கள், விடியோ பிரசார இயக்ககம் ஆகிய மூன்று துறைகள் அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்நிலையில், தனது கட்டுப்பாட்டுக்குள்பட்ட 4 திரைப்படப் பிரிவுகளை இணைக்க செய்தி, ஒலிபரப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம், திரைப்பட விழாக்கள் இயக்ககம், இந்திய திரைப்படங்கள் பிரிவு ஆகிய 4 பிரிவுகளையும் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம், தனியார் - அரசு பங்களிப்பு முறையில் திரைப்பட தயாரிப்புக்கு உதவும் அமைப்பாகும்.
இந்திய திரைப்பட பிரிவானது, ஆவணப் படங்களையும் குறும்படங்களையும் தயாரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சர்வதேச, தேசிய திரைப்பட விழாக்களுக்கு ஏற்பாடு செய்யும் பணிகளை, தேசிய திரைப்பட விழாக்கள் இயக்ககம் மேற்கொள்கிறது. மேற்கண்ட 4 பிரிவுகளும் இணைக்கப்படும்போது மேலும் திறம்பட பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com