உச்ச நீதிமன்ற விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது

உச்ச நீதிமன்ற விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
அந்த நீதிபதிகளின் முடிவை பாராட்டியாக வேண்டும். அவர்களுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடவே அதிக வாய்ப்புள்ளது. ஆனால், இந்த விசாரணையானது, பாரப்பட்சமில்லாததாக இருக்க வேண்டும். மும்பைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை வருகை தரவுள்ளார். உச்ச நீதிமன்றம் தற்போது பிரச்னையை எதிர்கொண்டு வரும் நிலையில், மும்பைக்கு அவர் வர வேண்டிய அவசியம் என்ன? மும்பைக்கு அவர் வரும் அளவுக்கு, இங்கு என்ன முக்கிய நிகழ்ச்சி நடக்கிறது?
நீதித்துறையை காது கேளாத மற்றும் பேச முடியாத அமைப்பாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இந்தத் தேசத்துக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகளை மக்கள் (அரசியல்வாதிகள்) ஆற்றியுள்ளனரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தில்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேரும் செய்தியாளர்களை சந்தித்தது அதிர்ச்சியளித்தது. நாட்டு மக்களுக்கு தற்போது இந்த நீதித்துறை மீது நம்பிக்கை வைப்பதா? வேண்டாமா? என்று கேள்வியெழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது. நீதித்துறை தனது பணியை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார் உத்தவ் தாக்கரே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com