சட்டப் பேரவைத் தேர்தல்: கர்நாடக காங்கிரஸாருடன் ராகுல் ஆலோசனை

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து, கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
சட்டப் பேரவைத் தேர்தல்: கர்நாடக காங்கிரஸாருடன் ராகுல் ஆலோசனை

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து, கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதுதில்லியில் உள்ளதனது இல்லத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், செயல் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், எஸ்.ஆர்.பாட்டீல், கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மூத்தத் தலைவர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், பி.கே.ஹரிபிரசாத், பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் வீரப்ப மொய்லி, கட்சியின் மேலிடப் பார்வையாளர் மாணிக் தாகூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில் தேர்தலுக்கு கட்சி எடுத்துள்ள முயற்சிகள், வியூகங்கள், ஆட்சி நிலவரங்கள், கர்நாடக அரசியல் சூழல், பாஜக, மஜதவின் தேர்தல் பிரசாரங்கள் உள்ளிட்ட அனைத்துஅம்சங்கள் குறித்தும் கேட்டறிந்த ராகுல் காந்தி, "காங்கிரஸார் கருத்து வேறுபாடுகளை மறந்து கருத்தொற்றுமையுடன் தேர்தலை சந்தித்து வெற்றி வாகை சூட வேண்டும். பாஜக, மஜகவின் வியூகத்தை முறியடித்து, தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார்.
கூட்டத்துக்குப் பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தல் குறித்து ராகுல் கேட்டறிந்தார். கட்சி, ஆட்சி குறித்தும் விவரங்களை பெற்றுகொண்டார். தேர்தலுக்காக கட்சி நடத்தியுள்ள தயாரிப்பு வேலைகள், காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள், அரசுக்கு எதிராக மக்கள் அலை இல்லாதது குறித்து ராகுல் மகிழ்ச்சி தெரிவித்தார். 
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கை வாயிலாக மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. தேர்தல் அறிக்கையில் இல்லாத திட்டங்களையும் அரசு செயல்படுத்தியுள்ளது. 
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளோம்.இந்த சட்டப்பேரவை தேர்தல் எடியூரப்பாவுக்கும் சித்தராமையாவுக்கும் இடையே, பிரதமர் மோடிக்கும் சித்தராமையாவுக்கும் இடையே நடப்பதல்ல. 
இந்தத் தேர்தல் கொள்கை அடிப்படையில், மதவாத சக்திகளுக்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையே நடப்பதாகும் 
என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com