தமிழகத்துக்கு 3.33 டிஎம்சி கிருஷ்ணா நதிநீர்: ஆந்திரம் ஒப்புதல்

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தமிழகத்துக்கு கிருஷ்ணா நதியில் 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதற்கு ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தமிழகத்துக்கு கிருஷ்ணா நதியில் 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதற்கு ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில நீர்வளத்துறை செயலாளர் சசி பூஷண் குமார் உத்தரவு ஒன்றை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், என்டிஆர் தெலுங்கு கங்கா திட்ட தலைமை பொறியாளருக்கு கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்துக்கு 3.33 டிஎம்சி கிருஷ்ணா நதிநீரை திறந்து விடுவதற்கு அனுமதியளித்துள்ளார்.
முன்னதாக, தமிழக நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர், ஆந்திர அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 நீர்த்தேக்கங்களில் குறைவான மழைப்பொழிவு காரணமாக 46 சதவீத நீர் மட்டுமே இருக்கிறது, ஆதலால் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
கிருஷ்ணா நதீநீர் நிர்வாக வாரிய விதிகளின்படி, கிருஷ்ணா நதியில் வரும் 5 டிஎம்சி தண்ணீரில் சென்னையின் குடிநீர் தேவைக்காக 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். 
அதன்படியே, ஆந்திர மாநில நீர்வளத்துறை செயலாளர், சென்னையின் குடிநீர் தேவையை கருதி உடனடியாக கிருஷ்ணா நதிநீரை திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com