ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து

மும்பை அருகே ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து

மும்பை அருகே ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மும்பை கடற்கரையில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில், அரபிக் கடலில் ஓஎன்ஜிசியின் (எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனம்) எண்ணெய் கிணறு அமைந்துள்ளது. இங்கு செல்வதற்காக, ஜுஹூ விமான தளத்தில் இருந்து பவான் ஹன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் 5 அதிகாரிகள் சனிக்கிழமை காலை 10.25 மணியளவில் புறப்பட்டனர். 2 விமானிகள் உள்பட 7 பேருடன் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, மாயமானது. இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன.
கடற்படையின் ஐஎன்எஸ் டெக் போர்க்கப்பலும், கண்காணிப்பு விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடலோர காவல் படை கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன. அப்போது, ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டறியப்பட்டது. மேலும், 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மீதமுள்ள 3 பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்த விபத்து தொடர்பாக, விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக, விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏஏஐபி) விரிவாக விசாரணை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com