ராஜஸ்தான் சுற்றுலா ரயில்களில் வருவாய் சரிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலா சொகுசு ரயில்களின் வருவாய் கடந்த 3 ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்து விட்டதாக, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலா சொகுசு ரயில்களின் வருவாய் கடந்த 3 ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்து விட்டதாக, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தில், அந்த மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து 2 சொகுசு ரயில்களை ரயில்வே துறை இயக்கி வருகிறது. பேலஸ் ஆன் வீல்ஸ், ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் ஆகிய இரு பெயர்களில் அந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்கள், புது தில்லி, ஜெய்ப்பூர், மதோபூர், உதய்ப்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பரத்பூர், ஆக்ரா, வாராணசி, கஜுராஹோ ஆகிய நகரங்கள் வழியாக இயக்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இந்த ரயில்களின் வருவாய் குறைந்து விட்டதாக, ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்தத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலின் வருவாய் 24 சதவீதம் குறைந்துவிட்டது. ராயல் ராஜஸ்தான் ரயிலின் வருவாய் 63.18 சதவீதம் குறைந்துவிட்டது. 
பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலில் கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 2024-ஆக இருந்தது. அது, 2016-17-ஆம் நிதியாண்டில் 1373-ஆகக் குறைந்து விட்டது. 
இதேபோல், ராயல் ராஜஸ்தான் ரயிலில் கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் 654 பேர் பயணம் செய்த நிலையில், கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் 237 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.
இந்த சொகுசு ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில சுற்றுலா மேம்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும். 
அதில், ரயில்வே துறை செய்வதற்கு ஒன்றுமில்லை. குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுவதே, வருவாய் குறைவுக்கு ஒரு காரணமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com