என்னைக் கொலை செய்ய ராஜஸ்தான் போலீசார் சதி: விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு 

என்கவுண்டரில் தன்னைக் கொலை செய்ய ராஜஸ்தான் போலீசார் சதி செய்வதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா பரபரப்பு குற்றச்சாட்டினைக் கூறியுளார். 
என்னைக் கொலை செய்ய ராஜஸ்தான் போலீசார் சதி: விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு 

அகமதாபாத்:   என்கவுண்டரில் தன்னைக் கொலை செய்ய ராஜஸ்தான் போலீசார் சதி செய்வதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா பரபரப்பு குற்றச்சாட்டினைக் கூறியுளார். 

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவராக இருப்பவர் பிரவீன் தொகாடியா. இவர் மீது ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் போலீசில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பழைய வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் இன்று கைது வாரண்ட் பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து அம்மாநில போலீசார் குஜராத் மாநில போலீசாருடன் திங்களன்று பிரவீன் தொகாடியாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவரை அங்கே காணவில்லை. ஆனால் அன்று காலை 10:45 மணியளவில் அலுவலகத்தில் இருந்து ஆட்டோவில் சென்ற அவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் போலீஸ் தொகாடியாவினைக் கைது செய்து விட்டதாக தகவல்கள் பரவத்  துவங்கின. ஆனால் அவரைக் கைது செய்யவில்லை என்று போலீஸ் மறுப்புத் தெரிவித்தது. அதே சமயம் அவரைக் கண்டுபிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அகமதாபாத் மருத்துவமனை ஒன்றில் செவ்வாயன்று காலை சுயநினைவற்ற நிலையில் பிரவின் தொகாடியா கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது:

10 வருடங்களுக்கு முந்தைய பழைய வழக்கு ஒன்றில் நான் வேண்டுமென்றே இலக்காக்கப்பட்டுள்ளேன், என்னுடைய குரலை ஒடுக்கத் தொடர்ந்து  முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநில போலீசார் என்னை கைது செய்ய வந்து உள்ளார்கள். அவர்கள் என்னை என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டு உள்ளனர் என எனக்கு செய்தி கிடைத்தது. உடனே நானும் தொண்டர் ஒருவரும் ஆட்டோ ரிச்சாவில் தெல்தேஜ் பகுதிக்கு சென்றோம்.

இவ்விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் உள்துறை அமைச்சர் கடாரியாவிற்கு போன் செய்து தெரிவித்தேன். ஆனால அவர்கள் போலீஸ் வந்த விவகாரத்தை மறுத்தனர். பின்னர் அது உண்மைதான் என்று தெரியவந்தவுடன் எனக்கு சந்தேகம் வந்து என்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். அதனை வைத்து அவரகள் என்னைக் கைது செய்வதை தவிர்க்கலாம் என்றுதான் அவ்வாறு செய்தேன்.

பிரச்னைகளைத் தவிர்க்க நான் விமானம் மூலம் ஜெய்பூர் சென்று அங்கு கோர்ட்டில் ஆஜராகிவிட திட்டமிட்டேன். ஆட்டோ ரிக்வஷாவில் விமான நிலையம் சென்ற போது எனக்கு மயக்கம் ஏற்பட்டது உடனடியாக ஆட்டோவை மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். அங்கு நான் சுயநினைவின்றி இருந்தேன்.

செவ்வாய் காலை நான் எழுந்ததும் மருத்துவமனை ஒன்றில் இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டேன். நான் சாவுக்கோ, என்கவுண்டருக்கோ பயபடவில்லை. சட்டத்தையும் மதித்து என்னை நான் காப்பாற்றிக் கொண்டேன்.

ராமர் கோவில், பசுவதைக்கு தடைச் சட்டம் இயற்றுதல், உள்ளிட்ட விவகாரங்களில் என்னுடைய குரலைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றேன். எனவே என் குரலை ஒடுக்கவே பழைய வழக்குகள் தூசி தட்டி மீண்டும் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியவர்கள் யார் என்பதை தெரிவிப்பேன்

இவ்வாறு தொகாடியா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com