உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளை சந்தித்தார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

முக்கியமான வழக்குகளை ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து தம்மை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய 4 மூத்த நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபஸக்
உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளை சந்தித்தார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

முக்கியமான வழக்குகளை ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து தம்மை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய 4 மூத்த நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபஸக் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்து நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் சில தினங்களுக்கு முன் போர்க்கொடி உயர்த்தினர். மரபுகளுக்கு மாறாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டி பேட்டியளித்தனர். 
நீதிபதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டைக் களைய உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்தது. இக்குழுவினர் தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளையும் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகிய நால்வரும் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். 
இதனிடையே, பல்வேறு முக்கியமான வழக்குகளை வரும் 17-ஆம் தேதி முதல் விசாரிப்பதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. எனினும், தலைமை நீதிபதியை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளில் ஒருவரும் அதில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், முக்கியமான வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளை தமக்கு எதிராக எழுப்பிய நான்கு மூத்த நீதிபதிகளான ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேசிûனார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் தொடங்குவதற்கு முன்பு இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், இது 15 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது, வேறு சில நீதிபதிகளும் உடன் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புக்குப் பிறகு தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் தங்கள் அலுவல்களை கவனிக்கச் சென்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com