கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது. வரும் வியாழக்கிழமையன்று (ஜன.18)
கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது. வரும் வியாழக்கிழமையன்று (ஜன.18) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. அதற்கான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். அந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் சிபிஐ தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவரது சார்பில் வழக்குரைஞர்களே விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இதற்கு நடுவே, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையை கார்த்தியின் தந்தையும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரத்தை விமர்சித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com