தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க முன்னுரிமை

பிகாரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க முன்னுரிமை அளித்து வருவதாக அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க முன்னுரிமை

பிகாரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க முன்னுரிமை அளித்து வருவதாக அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
பிகாரின் பக்ஸர் மாவட்டத்தில் தங்கள் பகுதிக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற கூறி தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறையும் நிகழ்ந்தது. இந்த சூழ்நிலையில் நிதீஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிகார் மாநில அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை அவர், கிராமம், கிராமமாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக கயை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட நிதீஷ் குமார், அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
கிராமப் பகுதி மக்களிடையே பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில், சில விஷமிகள் தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். மற்ற பகுதிகளில் அதிக வசதிகள் உள்ளன. உங்கள் பகுதிக்கு போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று கூறி வன்முறையில் ஈடுபட மக்களைத் தூண்டுகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. முக்கியமாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் அரசின் 
நலத் திட்டங்கள் கிடைக்க உரிய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வளர்ச்சிப் பணிகள் முழுமையாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கில்தான் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். மக்கள் நலனை முதல் நோக்கமாகக் கொண்டு பிகார் மாநில அரசு செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com