25-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 29 கைவினைப் பொருட்களுக்கு வரி விலக்கு, 49 பொருட்களின் வரி குறைப்பு

தில்லியில் நடைபெற்ற 25-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 49 பொருட்களின் மீதான வரியைக் குறைத்து வியாழக்கிழமை அறிவித்தார்.
25-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 29 கைவினைப் பொருட்களுக்கு வரி விலக்கு, 49 பொருட்களின் வரி குறைப்பு

தில்லியில் மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தின் முடிவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:

25-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 49 பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கேளிக்கை பூங்காக்களில் டிக்கெட் கட்டண வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவிதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வருகிற 25-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு கானொலி காட்சி மூலம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com