கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் இருவர் அமைச்சரவையில் சேர்ப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பெண்கள் கனடாவின் ஒண்டாரியோ மாகாண அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் இருவர் அமைச்சரவையில் சேர்ப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பெண்கள் கனடாவின் ஒண்டாரியோ மாகாண அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
கனடாவின் ஒண்டாரியோ மாகாண முதல்வராக கேத்லீன் வைனி பதவி வகித்து வருகிறார். அந்த மாகாணத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அந்த மாகாணத்தில் கணிசமான அளவில் உள்ள இந்தியர்களைக் கவரும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண்களுக்கு அவர் அமைச்சர் பதவி அளித்துள்ளார். ஹரிந்தர் மாலி, இந்திரா நாயுடு ஹாரிஸ் என்ற அந்த இருவரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். 
ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் - ஸ்பிரிங்டேல் தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாலி ஆவார். அவர் கனடாவின் முதல் சீக்கிய எம்.பி.யின் குர்பக்ஸ் சிங் மாலியின் மகள் ஆவார்.
ஒண்டாரியோ மாகாண பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், சீக்கியப் பெண் எம்.பி.யான மாலி அமைச்சராக்கப்பட்டுள்ளார். இது சீக்கியரான ஜக்மீத் சிங் என்பவர் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி அந்த மாகாண மக்களிடையே செல்வாக்கு பெற்றுவருவதைத் தடுக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது. தற்போது அந்த மாகாணத்தில் சீக்கியப் பெண்ணான மாலிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டதன் மூலம் சீக்கியர் வாக்குகளைத் தக்க வைக்க முடியும் என்று முதல்வர் கேத்லீன் வைனி கருதுகிறார்.
இதனிடையே, மற்றொரு அமைச்சராகப் பதவியேற்றுள்ள இந்திரா நாயுடு ஹாரிஸ், ஹால்டன் தொகுதியில் இருந்து பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் குழந்தைகள் நல்வாழ்வுத் துறையையும் கவனிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com