உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விவகாரத்தில் அரசும் அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது: பிரதமர் மோடி! 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு தொடர்பான விவகாரத்தில் அரசும் அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விவகாரத்தில் அரசும் அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது: பிரதமர் மோடி! 

புதுதில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு தொடர்பான விவகாரத்தில் அரசும் அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துளார்.

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் கடந்த 12-ஆம் தேதியன்று திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் மறைமுகமாகக் குற்றம்சாட்டினர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகவும், மூத்த நீதிபதிகளான தங்களைத் தாண்டி வேறு நீதிபதிகளுக்கு வழக்குகளை அவர் ஒதுக்குவதாகவும் அவர்கள் கூட்டாக குறைகூறினர்.

"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து இதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், எனினும் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அவர்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தையும் அந்த செய்தியாளர் சந்திப்பில் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளும் வெளியிட்டனர்.  உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள மூத்த நீதிபதிகளின் இந்த மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதன்முறையாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு தொடர்பான விவகாரத்தில் அரசும் அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என்று அவர் தெரிவித்துளார். இதுதொடர்பாக ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:

நான் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அரசும் கண்டிப்பாக இதில் தலையிடக் கூடாது. அரசியல் கட்சிகளும் இதில் தலையிடுதல் கூடாது.

நமது நீதித்துறைக்கு என சிறப்பான கடந்த காலம் உள்ளது. நமது நீதிபதிகள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களனைவரும்  ஒன்றாகக் கூடியமர்ந்து பேசி இந்த பிச்னைக்கு ஒரு தீர்வு காண்பார்கள். எனக்கு நமது நீதியமைப்பின் மீது நம்பிக்கையுள்ளது. அவர்கள் கண்டிப்பாக ஒரு தீர்வை எட்டுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com