அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

நாட்டில் உள்ள அனைத்து ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருக்கிறது.
அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

நாட்டில் உள்ள அனைத்து ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வெளியாக உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
இப்போது நாட்டில் உள்ள சுமார் 395 ரயில் நிலையங்கள் மற்றும் 50 ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அடுத்த கட்டமாக அனைத்து ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், குற்ற நிகழ்வுகளை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கிலும் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவுள்ளன.
புறநகர் ரயில் முதல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வரை அனைத்திலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஒரு ரயில் பெட்டியில் 8 கேமராக்கள் வரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 லட்சம் கேமராக்கள் வாங்கப்படவுள்ளன. மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இதற்கான நிதியைத் திரட்டுவதற்கும் பல்வேறு வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டில் அதிக ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் ரயில்வே பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. முக்கியமாக ஆளில்லாத ரயில்வே கடவுப் பாதைகளில் பாலம் அமைப்பது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது, பழைய தண்டவாளங்களைப் புதுப்பிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட இருகிறது. வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் ஆளில்லாத ரயில்வே கடவுப் பாதைகள் எதுவும் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com