குடியரசு தின விழாவில் கிழக்கு ஆசியக் கொள்கை வெளியீடு: நிர்மலா சீதாராமன்

தில்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுக் கொள்கை (ஆக்ட் ஈஸ்ட் பாலிசி) அறிவிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா
தில்லியில் ராணுவக் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கான என்.சி.சி. முகாமில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தில்லியில் ராணுவக் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கான என்.சி.சி. முகாமில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தில்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுக் கொள்கை (ஆக்ட் ஈஸ்ட் பாலிசி) அறிவிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தில்லியில் ராணுவக் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவுக்கான தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாமுக்கு திங்கள்கிழமை சென்ற அவர், அங்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார். 
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதற்கு முன்பு, கிழக்கு ஆசிய நாடுகளுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும் என்ற அளவில் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை (லுக் ஈஸ்ட் பாலிசி) இருந்தது. அந்த நாடுகளுடன் அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கொள்கை மாறியுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாகும். அதற்கேற்ப, கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்தக் கொள்கையை, தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 10 தலைவர்களின் முன்னிலையில் மத்திய அரசு அறிவிக்கும் என்றார் அவர்.
தில்லி ராஜபாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில், தாய்லாந்து, வியத்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிஃப்பின்ஸ், சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புரூனே ஆகிய கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com