மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

2024ஆம் ஆண்டுக்கு முன்பு, மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

2024ஆம் ஆண்டுக்கு முன்பு, மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
வாக்கு மீது நம்பிக்கை வைக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் முறை மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அமெரிக்க நிர்வாக முறையை நாம் கடைபிடித்தோம் எனில், அங்கு ஆட்சி நிர்வாகத்தில் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட காலத்துக்கு ஆட்சி நிர்வாகி தனது பதவியில் இருப்பார்.
தேர்தலில் தோற்கடிக்கப்படும் வரையிலோ, அல்லது அந்தப் பதவிக்கு வேறு ஒருவர் வரும் வரையிலோ, நிர்வாகி ஆட்சியில் இருப்பார். அந்த அரசும் அதுவரையில் பதவியில் இருக்கும்.
தற்போது இருக்கும் தேர்தல் முறைக்கு மாற்றாக, மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதை அமல்படுத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியமாகும்.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது, ஆட்சி நிர்வாகத்துக்கு உதவியாக இருக்கும். செலவினத்தையும் குறைக்க உதவும். அதேபோல், 2 தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதால், ஆண்டு முழுவதும் நடக்கும் பிரசாரம் என்பது குறுகிய காலத்துக்கு மட்டும் என்று சுருங்கிவிடும்.
2019ஆம் ஆண்டில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. ஏனெனில், சில மாநிலங்களில் கடந்த ஆண்டுதான் சில அரசுகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் முடிந்தது. இதேபோல், சில மாநிலங்களில் நிகழாண்டில்தான் தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே, 2024ஆம் ஆண்டில் வேண்டுமானால், மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து திட்டமிடலாம்.
மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதே நிலைப்பாட்டைத்தான் தேர்தல் ஆணையமும் கொண்டுள்ளது என்றார் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com