செல்போனுக்கான வித்தியாச 'பவர் பேங்க்' வைத்திருந்த விமானப் பயணிக்கு நேர்ந்த கதி! 

செல்போனுக்கான வித்தியாச வடிவ 'பவர் பேங்க்' வைத்திருந்த விமானப் பயணி ஒருவர் பயணத்திற்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
செல்போனுக்கான வித்தியாச 'பவர் பேங்க்' வைத்திருந்த விமானப் பயணிக்கு நேர்ந்த கதி! 

புதுதில்லி: செல்போனுக்கான வித்தியாச வடிவ 'பவர் பேங்க்' வைத்திருந்த விமானப் பயணி ஒருவர் பயணத்திற்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு தில்லியிலிருந்து அகமதாபாத் செல்லும் 'கோ ஏர்' நிறுவன விமானம் ஒன்று புறப்படத் தயார் நிலையிருந்தது. அப்பொழுது பயணிகளுக்கான சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, பயணியொருவரது கைப்பையில் கையெறி குண்டு வடிவத்தில் ஒரு பொருள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்தப் பயணி விமானத்தில் ஏறுவதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் நடைபெற்ற விசாரணையின் பொழுதுஅவர் வைத்திருந்த அந்தப் பொருள் செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற உதவும் 'பவர் பேங்க்' என்னும் சேமிப்புக்கு கருவி என்பது தெரிய வந்தது.

அதன் வடிவம் ஒரு கையெறி குண்டினை ஒத்திருந்ததன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தினை செய்தி நிறுவனம் ஓன்றுக்கு அளித்த பேட்டியில் கோ ஏர்' நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். அதே நேரம்முறையான விசாரணைக்குப் பிறகு அவர் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பதனையும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com