2018-19-ம் நிதி ஆண்டில்  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 - 7.5 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்! 

2018-19-ம் நிதி ஆண்டில்  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 - 7.5 சதவீதமாக இருக்கும் என்று திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19-ம் நிதி ஆண்டில்  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 - 7.5 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்! 

புதுதில்லி: 2018-19-ம் நிதி ஆண்டில்  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 - 7.5 சதவீதமாக இருக்கும் என்று திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந் உரையுடன் திங்களன்று துவங்கியது.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டமாக இது நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2017-18ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு.

நடப்பு 2017-18ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதமாக இருக்கும். 2018-19ம் நிதி ஆண்டில்  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 - 7.5 சதவீதமாக இருக்கும். 2017-18ம் ஆண்டில் நாட்டில் சில்லரை விற்பனை பணவீக்கம் 3.3 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த 6 ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும்.

வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற அடையாளத்தை இந்தியா வரும் நிதியாண்டில் பெறும். நாட்டில் வேளாண்மைக்கு ஊக்கமளித்தல், ஏர் இந்தியா நிறுவன தனியார் மயம், அரசு வங்கிகளுக்குத் தேவையான  மறுமுதலீடு ஆகியவற்றுக்கு அடுத்த ஆண்டு கொள்கை வகுக்க வேண்டும்.

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் தற்பொழுது வரை குறிப்பிடத்தகுந்த அளவு குறைவாக இருக்கிறது.  அத்துடன்  மறைமுக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக, ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நிதி சேமிப்பு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் வாராக்கடன் நிலுவையினைச் சமாளிக்க திவால் சட்டம் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வட்டி கழிவு தொகையாக ரூ.20 ஆயிரத்து 339கோடி வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில் நாட்டின் சேவைத் துறை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம், கிராமங்களில் கழிவறை வசதி 2014ம்ஆண்டுக்கு பின் 2018ம் ஆண்டு ஜனவரி வரை 39 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவில் ஏற்றுமதி சிறப்பாக செயல்பட்டு வலிமையுடன் இருக்கிறது. கல்வி, சுகாதாரத்துடன் கூடிய முழுமையான வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புக்கு முன்னுரிமை தரப்படும்.

இவ்வாறு அறிக்கையின் முக்கிய அம்சங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com