குடிநீர், சாலை வசதி ஏற்படும் வரை வாக்கு இல்லை: வாக்குப்பதிவை புறக்கணித்த ராஜஸ்தான் கிராம மக்கள்

குடிநீர் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தும் வரை வாக்களிக்கப்போவதில்லை என ராஜஸ்தான் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
குடிநீர், சாலை வசதி ஏற்படும் வரை வாக்கு இல்லை: வாக்குப்பதிவை புறக்கணித்த ராஜஸ்தான் கிராம மக்கள்

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இடைத்தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் மற்றும் அஜ்மீர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மண்டல்கிரக் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதுபோல மேற்கு வங்க மாநிலத்தின் உலுபேரியா நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய இடைத்தேர்தலாக அமைந்துள்ளது. இதில் மொத்தம் 41 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 38 லட்சம் வாக்காளர்கள் இந்த அனைத்து தொகுதிகளிலும் உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நாடாளுமன்ற தொகுதியில் 1,987 வாக்குச்சாவடிகளும், அஜ்மீர் நாடாளுமன்ற தொகுதியில் 1,925 வாக்குச்சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டன. மண்டல்கிரக் சட்டப்பேரவைத் தொகுதியில் 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், அல்வர் தொகுதியில் மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு 18.27 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அஜ்மீர் தொகுதியில் 23 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு 18.42 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மண்டல்கிரக் தொகுதியில் 8 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு மொத்தம் 2.31 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அஜ்மீர் தொகுதியில் இடம்பெற்றுள்ள மண்டா எனும் கிராமத்தில் வாக்குப்பதிவு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. 

அந்த கிராமத்துக்கு குடிநீர் மற்றும் சாலை வசதிகள் ஏற்படுத்தித் தர அப்பகுதி மக்கள் பல காலமாக கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அவை நிறைவேறும் வரை வாக்களிக்கப் போவதில்லை என்று கூறி வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com