சுவிஸ் தேசிய வங்கியில் வைத்துள்ள பணமதிப்பில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

சுவிஸ் தேசிய வங்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணமதிப்பு இருப்பின்படி
சுவிஸ் தேசிய வங்கியில் வைத்துள்ள பணமதிப்பில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

சுவிஸ் தேசிய வங்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணமதிப்பு இருப்பின்படி தரவரிசையில் இந்தியா 73வது இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், இந்த வங்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு கணக்கின்படி 44 சதவீதம் அளவிற்கு இந்தியாவின் சேமிப்பு குறைந்ததை அடுத்து தரவரிசையில் 88வது இடத்திற்கு சென்றது.  ஆனால், சமீபத்திய தகவலின்படி, 2017-ஆம் ஆண்டில் 50 சதவீதத்திற்கு (சுமார் 7 ஆயிரம் கோடி) உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தியா 73வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்த தரவரிசையில் பாகிஸ்தான் 72வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.  முதல் 10 இடத்தில் மேற்கிந்திய தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங், பஹாமஸ், ஜெர்மனி, கிர்ன்சே, லக்சம்பர்க் மற்றும் கேமன் தீவுகள் ஆகிய நாடுகள் உள்ளன.

சுவிஸ் வங்கிகளில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை இந்தியா முதல் 50 இடங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் 2015-ஆம் ஆண்டில் இது 75வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 61வது இடத்திலும் இருந்தது. 2004-ஆம் ஆண்டில் 37வது இடத்தில் மிக உயர்ந்த நிலையி்ல் இருந்தது.

சுவிஸ் வங்கிகளில் உலகெங்கிலும் இருந்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் மொத்தம் 3,20,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியர்கள் நிர்வகித்து வரும் நிதிகள் இப்போது 0.07 சதவீதமாக மட்டுமே உள்ளன. 

மேற்கண்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் சுவிஸ் வங்கி அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ  புள்ளிவிவரங்கள் ஆகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com