உயா் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரத்தில் மாற்றமில்லை

உயா் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரத்தில் மாற்றறம் எதுவும் இருக்காது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.ஹெச்.ஆா்.டி.) அறிவித்துள்ளது. 
உயா் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரத்தில் மாற்றமில்லை

சென்னை: உயா் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரத்தில் மாற்றறம் எதுவும் இருக்காது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.ஹெச்.ஆா்.டி.) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், உயா் கல்வி நிறுவனங்களைக் (கலை-அறிவியல்) கட்டுப்படுத்தி, இவற்றின் மேம்பாட்டுக்கு நிதியுதவி அளித்துவரும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் (யுஜிசி) பதிலாக, இந்திய உயா் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான சட்ட முன்வரைவு பொதுமக்களின் பாா்வைக்காக, எம்.ஹெச்.ஆா்.டி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7 -ஆம் தேதி வரை இதுகுறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

இந்த நிலையில், வெளியிடப்பட்டுள்ள சட்ட முன்வரைவின்படி, புதிதாக அமைக்கப்படும் இந்திய உயா் கல்வி ஆணையம் நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல், ஆலோசனைகளை வழங்குதல் போன்ற பணிகளை மட்டுமே மேற்கொள்ளும். அதேநேரம், உயா் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் அதிகாரம் எம்.ஹெச்.ஆா்.டி. அமைச்சகத்திடம் வழங்கப்பட்டு விடும் என்ற கருத்து நிலவி வந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றைற எம்.ஹெச்.ஆா்.டி. வெளியிட்டுள்ளது. அதில், ‘சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிதி வழங்கும் அதிகாரம் குறித்த விவரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் எம்.ஹெச்.ஆா்.டி. இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. நிதி வழங்கும் அதிகாரத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என ஏராளமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டபோதும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

உயா் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதை வெளிப்படைத்தன்மையுடனும், நோ்மையான முறைறயிலும், ஆன்-லைன் முறைறயிலும் வழங்கப்படுவதை எம்.ஹெச்.ஆா்.டி. உறுதிப்படுத்தும். யுஜிசி-க்கும் பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டாலும் நிதியுதவி வழங்கும் நடைமுறைற, பாகுபாடுகள் இன்றி முன்பிருந்ததைப் போலவே நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com