கட்செவி அஞ்சலுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

கட்செவி அஞ்சல் மூலம் பரவும் பொய்யான தகவல்கள் மூலம் இந்தியாவில் கொலை சம்பவங்கள் நிகழ்வதால் கட்செவி அஞ்சலுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்செவி அஞ்சலுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

கட்செவி அஞ்சலில் பரவும் பொய்யான தகவல்களால் இந்தியாவின் பல இடங்களில் பல கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மக்கள் மத்தியில் இதுகுறித்தான விழிப்புணர்வை அரசுகள் ஏற்படுத்தினாலும், இந்த குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மோசமடைந்து தான் வருகிறது. குறிப்பாக தற்போது குழந்தை கடத்தல் சம்பவம் குறித்தான பொய் தகவல்களை வைத்து அப்பாவி மக்களை கொலை செய்யும் சம்பவங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குழந்தை கடத்தல் என கட்வெலி அஞ்சலில் பரவும் வதந்தியை வைத்து பொதுமக்களால் தாக்கப்பட்டு 20 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கட்செவி அஞ்சலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த அமைச்சகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,

"கட்செவில் அஞ்சலில் பரவலாக பரவும் தவறான ஆர்வத்தை தூண்டுகிற செய்திகள் மத்திய அரசுக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப அடித்தளங்களில் பரவும் பொய்யான தகவல்கள் மற்றும் நிகழ்வுகளை அமைச்சகம் கண்காணித்து வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த கொலை சம்பவங்கள் மற்றும் கிளர்ச்சியை தூண்டும் செய்திகள் பரவுவது குறித்தும் கட்செவில் அஞ்சல் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற செய்திகள் பரவுவதை தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கட்செவி அஞ்சல் போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஒரு சில தவறானவர்களால் தவறான ஆர்வத்தை தூண்டும் வகையில் செய்திகளை பரப்பி பயன்படுத்துகின்றனர். அதற்காக, கட்செவி அஞ்சல் இதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது" என்று கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com