நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு 

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.200 ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு 

புது தில்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.200 ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை காலை 11 மணிக்குத்  துவங்கியது. இந்த கூட்டத்தில் நெல் மற்றும் சோளம் ஆகியவற்றுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

அதன்படி நெல் மற்றும் சோளம் இரண்டுக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வருமாறு:

சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.200 ஆக அதிகரித்து ரூ. 1750 வழங்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல முதல்தர ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.220 ஆக அதிகரித்து ரூ. 1770 வழங்கவும், மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதேசமயம் சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.275 ஆக அதிகரித்து ரூ.1700 வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com