தேசிய கீதத்தை அவமதித்த காஷ்மீர் பல்கலை., மாணவர்கள்: வைரலாகும் சர்ச்சை விடியோ

பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்த பொழுது அதனை அவமதிக்கும் விதமாக, காஷ்மீர் பல்கலை., மாணவர்கள் சிலர் இருக்கையில் அமர்ந்திருந்த விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
தேசிய கீதத்தை அவமதித்த காஷ்மீர் பல்கலை., மாணவர்கள்: வைரலாகும் சர்ச்சை விடியோ

ஸ்ரீநகர்: பட்டமளிப்பு நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்த பொழுது அதனை அவமதிக்கும் விதமாக, காஷ்மீர் பல்கலை., மாணவர்கள் சிலர் இருக்கையில் அமர்ந்திருந்த விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. பட்டமளிப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் வழக்கம் போல் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

அப்பொழுது பெரும்பாலான மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.ஆனால் ஒரு சில மாணவர்கள் தங்கள் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களது நடவடிக்கை பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சில மாணவர்களின் இத்தகைய செயலுக்கு பலத்த கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com