கர்நாடக பட்ஜெட் தாக்கல்: விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, சாமானியன் தலையில் நிதிச்சுமை!

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணியின் முதல் பட்ஜெட்டை முதல்வர் குமாரசாமி, சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 5) தாக்கல் செய்தார். 
கர்நாடக பட்ஜெட் தாக்கல்: விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, சாமானியன் தலையில் நிதிச்சுமை!

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணியின் முதல் பட்ஜெட்டை முதல்வர் குமாரசாமி, சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 5) தாக்கல் செய்தார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் குமாரசாமி, முதல்முறையாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை 2018-19-ஆம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.26,581 கோடி, நீர் மேலாண்மை துறைக்கு ரூ.18,142 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.17,727 கோடி, மின்துறைக்கு ரூ.14,499 கோடி, சமூகநல மேம்பாட்டுத்துறைக்கு ரூ.14,123 கோடி மற்றும் பொதுப்பணித்துறைக்கு ரூ.10,200 கோடி வரை நிதி ஒதுக்கி முதல்வரும், நிதியமைச்சருமான குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த முறை காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தாண்டுக்கான கர்நாடக அரசின் பொது பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 13 லட்சத்து 734 கோடி என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வது தொடர்பாக மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக் குழு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் முதல்கட்டமாக டிசம்பர் 31, 2017 வரை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அவ்வகையில் ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.6,500 கோடி வரை தடையில்லா சான்று பெற்ற விவசாயிகளுக்கு புதிய பயிர்க்கடனாக வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பிட்ட காலத்துக்குள்ளாக பயிர்க்கடனை சரியான முறையில்  முழுமையாக திருப்பிச் செலுத்தியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அல்லது திருப்பிச் செலுத்திய தொகை, இவை இரண்டில் எது குறைவோ அந்த தொகையை மீண்டும் பயிர்க்கடனாகப் பெற அனுமதிக்கப்படுவர். 

மேலும் இஸ்ரேல் முறையிலான விவசாய முன்னேற்றத்துக்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயம் மற்றும் அதன் சந்தைப்படுத்தும் முறை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. அதுபோன்று ஆந்திர மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இயற்கை விவசாய முறையை அமல்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. 

இருப்பினும் நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் விதமான சில அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கூடுதலாக 30 முதல் 32 சதவீதம் வரை என்ற வகையில் ரூ. 1.14 மற்றும் மற்றும் டீசல் ஒரு லிட்டருக்கு கூடுதலாக 19 முதல் 21 சதவீதம் வரை என்ற வகையில் ரூ. 1.12 மாநில வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அன்னபாக்கியா எனும் இலவச அரிசி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு வழங்கப்பட்ட இலவச அரிசி 7 கிலோவில் இருந்து 5 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் சிறப்பாக இயங்கி வரும் இந்திரா உணவக திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தாலுக்கா மற்றும் மாவட்ட தலைநகரங்கள் என்று மொத்தம் 247 இடங்களில் ரூ.211 கோடி செலவில் விரிவுபடுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொது பட்ஜெட்டில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதமாக இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மது வகைகளுக்கு 4 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com