ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: கறுப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுக்கும் புதிய நடவடிக்கை?

கறுப்பு பணத்தை ஒழிக்க அனைத்து மின்னணு பணப்பரிவர்த்தனையும் கண்காணிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: கறுப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுக்கும் புதிய நடவடிக்கை?

கறுப்பு பணத்தை ஒழிக்க அனைத்து மின்னணு பணப்பரிவர்த்தனையும் கண்காணிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கறுப்பு பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2016 நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மிகப் பெரிய அறிவிப்பை மோடி அறிவித்தார். ஆனால், அதில் 99 சதவீத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கே திரும்பியது. அதனால், இந்த நடவடிக்கை மிகப் பெரிய தோல்வி என விமர்சகர்கள் விமர்சித்தனர். 

இதையடுத்து, தற்போது கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கறுப்பு பண விவகாரத்தில் மிகப் பெரிய சிரமமே அந்த பணப்பரிவர்த்தைணையின் பாதையை கண்டறிவது தான். அதற்காக மோடி அரசு புதிய முடிவை எடுப்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது, கறுப்பு பணத்தை தடுப்பதற்காக புதியதாக ஒரு தரவுத்தளம் அமைத்து, அதன் மூலம் நாட்டின் அனைத்து மின்னணு பணப்பரிவர்த்தனையும் கண்காணிக்கப்பது குறித்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  

பணப்பரிவர்த்தணையை கண்காணிப்பது என்பது கறுப்பு பண ஒழிப்பு மட்டுமின்றி பண மோசடிகளை தடுக்க வழிவகுக்கும் என்பதை காரணம் காட்டினாலும், இந்த புதிய முறை நிச்சயம் மக்களின் தனியுரிமையை பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. 

அதனால், ஒருவேளை இது நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானால் தனியுரிமையை காரணம் காட்டி இதற்கு ஒரு புறம் வலுவான எதிர்ப்புகள் கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போதைய நடைமுறையில், 10 லட்சத்துக்கு மேலான பணப்பரிவர்த்தனை அல்லது சர்ச்சைக்குரிய பணப்பரிவர்த்தனையை நிதி நுண்ணறிவு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com