காங்கிரஸின் கவனம் எல்லாம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சி மீதுதான்: பிரதமர் மோடி சாடல்

காங்கிரஸ் கட்சியின் கவனம் எல்லாம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சியின் மீது மட்டுமே உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப்பில் நடைபெற்ற கூட்டத்தில் புதன்கிழமை சாடினார்.
காங்கிரஸின் கவனம் எல்லாம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சி மீதுதான்: பிரதமர் மோடி சாடல்

காங்கிரஸ் கட்சியின் கவனம் எல்லாம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சியின் மீது மட்டுமே உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப்பில் நடைபெற்ற கூட்டத்தில் புதன்கிழமை சாடினார்.

பஞ்சாப்பில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுகளாக நமது விவசாயிகள் வைத்த நம்பிக்கை மற்றும் அவர்களின் கடின உழைப்பின் மீது காங்கிரஸ் கட்சி அடையாளம் காண தவறிவிட்டது. அவர்களுக்கு வெறும் வாக்குறுதிகள் மட்டுமே அளித்ததே தவிர அதை காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இருப்பினும் அவர்களுக்கு ஒரு குடும்பத்தின் வளர்ச்சி மீது தான் அதிக கவனம் செலுத்தியது. விவசாயிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்தது. 

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி, ஒரு ஓய்வுதியத் திட்டம், விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம், மண் வளப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஜூலை 4-ஆம் தேதி 2018-19 நிதியாண்டு முதல் 14 பயிர்களின் மீதான குறைந்தபட்ச கொள்முதல் விலையை 50 சதவீதம் அதிகரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com