மாநிலங்களவையில் 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி: வெங்கய்ய நாயுடு அறிவிப்பு

மாநிலங்களவையில் வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, புதன்கிழமை அறிவித்தார்.
மாநிலங்களவையில் 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி: வெங்கய்ய நாயுடு அறிவிப்பு

மாநிலங்களவையில் வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, புதன்கிழமை அறிவித்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அனைவரையும் தங்களின் தாய்மொழியில் பேசுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். தாய்மொழியில் உரையாடும்போது ஒருவரின் சிந்தனை மேம்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய அரசியலமைப்பு பிரிவு 8-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கி குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு, புதன்கிழமை அறிவித்தார்.

முன்னதாக, மாநிலங்களவையின் தலைவராக வெங்கய்ய நாயுடு பொறுப்பேற்றபோது, மாநிலங்களவையில் 22 மொழிகளும் பேச அனுமதி வழங்கி நடைவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் தாய்மொழியில் பேசும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போதுதான் மாநிலங்களவையில் முதன்முறையாக 22 மொழிகள் பேசப்படவுள்ளன. இதற்காக மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் இந்த 22 மொழிகளில் தற்போது வரை ஆசாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 12 மொழிகளுக்கு ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். போதோ, மைதாலி, மணிப்பூரி, மராத்தி மற்றும் நேபாளி ஆகிய 5 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் மக்களவையில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதர 5 மொழிகளுக்கு தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com