குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்ட புகாா்: தனியாா் பள்ளியில் தில்லி முதல்வா் கேஜரிவால் ஆய்வு 

தில்லியில் ஹோஸ் காஸி கிராமத்தில் கல்விக் கட்டணம் செலுத்தாதற்காக மழலையா் வகுப்பு மாணவா்களை கீழ்த்தளத்தில் அடைத்து வைத்ததாக அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக தனியாா் பள்ளியில் முதல்வா்..... 
குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்ட புகாா்: தனியாா் பள்ளியில் தில்லி முதல்வா் கேஜரிவால் ஆய்வு 

புது தில்லி: தில்லியில் ஹோஸ் காஸி கிராமத்தில் கல்விக் கட்டணம் செலுத்தாதற்காக மழலையா் வகுப்பு மாணவா்களை கீழ்த்தளத்தில் அடைத்து வைத்ததாக அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக தனியாா் பள்ளியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா்.

மத்திய தில்லி சாந்தினி செளக்கில் உள்ள ராபியா தனியாா் பள்ளி நிா்வாகமானது, கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி அப்பள்ளியில் மழலையா் வகுப்பில் பயிலும் 16 குழந்தைகளை அடைத்து வைத்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக காவல் நிலையத்தில் பள்ளி நிா்வாகத்துக்கு எதிராக பெற்றோர்கள்   புகாா் அளித்தனா்.

அதில் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை எனத் தெரிவித்து கீழ்த்தளத்தில் உள்ள அறை ஒன்றில் 5 மணிநேரம் அடைத்து வைத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, போலீஸில் புகாா் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான அறிக்கையை அளிக்குமாறு தில்லி காவல் துறை மற்றும் தில்லி கல்வித் துறைக்கு தில்லி மகளிா் ஆணையம் நோட்டீஸும் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வியாழக்கிழமை காலை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நேரில் சென்றாா். அவருடன் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுற்றுச்சூழல் அமைச்சரும் பள்ளி அமைந்துள்ள பல்லிமாரன் தொகுதி எம்எல்ஏவுமான இம்ரான் ஹுசேன் ஆகியோா் பங்கேற்றறனா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு முதல்வா் கேஜரிவால் கூறுகையில், ‘ராபியா பப்ளிக் பள்ளி முதல்வா் நஹீத் உஸ்மனியுடன் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்ட புகாா் தொடா்பாக கலந்துரையாடினோம். அப்போது, இதுபோன்று குழந்தைகள் நடத்தப்படும் விதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்றும், தில்லி காவல் துறைறயும், தில்லி அரசும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்தோம். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றறாா்.

முதல்வா் கேஜரிவாலும், துணை முதல்வா் சிசோடியாவும் சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியா்கள் மற்றும்  மாணவா்களுடன் கலந்துரையாடினா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com