நீங்கள் தயாரித்த விடியோ திருடப்படுகிறதா? கண்டுபிடிக்கும் டூலை அறிமுகப்படுத்துகிறது யூடியூப்

ஒவ்வொருவருக்கும் அவர்களது படைப்புகள் விலைமதிப்பற்றவைதான். அந்த உணர்வை மதிக்கும் வகையில், யூடியூப் ஒரு டூலை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் தயாரித்த விடியோ திருடப்படுகிறதா? கண்டுபிடிக்கும் டூலை அறிமுகப்படுத்துகிறது யூடியூப்


ஒவ்வொருவருக்கும் அவர்களது படைப்புகள் விலைமதிப்பற்றவைதான். அந்த உணர்வை மதிக்கும் வகையில், யூடியூப் ஒரு டூலை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது ஒருவர் தயாரித்த விடியோவை, வேறு யாரேனும் உரிமம் பெறாமல் திருடி அப்படியே பயன்படுத்தினாலும் அல்லது அதனை வேறு மாதிரி மாற்றி தங்களது சேனலில் பதிவு செய்து கொண்டாலும் கண்டுபிடித்துக் கொடுக்கும் டூலை அறிமுகப்படுத்தியுள்ளது யூடியூப்.

காப்பிரைட் மேட்ச் டூல் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டூலைப் பயன்படுத்தி, விடியோ தயாரிப்பாளர்கள், தங்களது படைப்புகள் திருடப்பட்டிருந்தால் அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யும்.

சுமார் ஒரு லட்சம் படைப்பாளிகளுடன் அடுத்த வாரம் முதல் இந்த டூல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ஒரு விடியோ திருடப்பட்டு, அது வேறு சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டால் அது குறித்த தகவலை படைப்பாளிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும் இந்த டூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடியோ படைப்பாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த டூலைப் பற்றி விடியோவை திருடிப் பயன்படுத்துபவர்களும் தெரிந்து கொள்வது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com