69 பெயர்களை கொலீஜியத்துக்கு அனுப்பியது சட்ட அமைச்சகம்

உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 69 பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 69 பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
நடைமுறைப்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலீஜியம், பெயர்களை தேர்வு செய்து மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். சட்ட அமைச்சகம் அதனை ஆய்வு செய்து, பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் தொடர்பான உளவுத் துறை அறிக்கையை இணைந்து, உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பும். இறுதியாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் நியமனம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்.
இப்போது நாட்டில் உள்ள 23 உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப 69 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 34 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளன. 
உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளில் 40 சதவீதம் வரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது. கடந்த 2016-இல் இதுவரை இல்லாத அளவுக்கு 126 உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரே ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆண்டுக்கு சராசரியாக 86 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com