பாகிஸ்தான் சர்வாதிகாரியுடன் மோடியை ஒப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவர்: வெடித்தது புதிய சர்ச்சை 

பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்குடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பேசியதால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் சர்வாதிகாரியுடன் மோடியை ஒப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவர்: வெடித்தது புதிய சர்ச்சை 

அலிராஜ்புர்: பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்குடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பேசியதால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்புரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் வந்திருந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அடிப்படைவாதம் எப்பொழுது தீவிரவாதத்திற்கு இட்டுச் செல்லும். பாகிஸ்தானில் ஜியா உல் ஹக்கால் ஊக்குவிக்கப்பட்ட மத அடிப்படைவதாமானது, அங்கு தீவிரவாதத்தினை பெருகச் செய்தது.இந்தியாவில் ஆளும் கட்சியினால் மத அடிப்படைவாதமானது 'ஹிந்துத்வா' என்ற பெயரில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதுவும் அதே போன்றதொரு ஆபத்தான போக்குதான்.

பாகிஸ்தானில் ஜியா உல் ஹக் 'ஜமாத் இ இஸ்லாமி’ போன்ற அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினார். அவர் தலிபான் போன்ற தீவிர அடிப்படைவாத அமைப்புகளை ஆதரிக்கத் துவங்கியதும், இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிக அளவிலான தீவிரவாத செயல்கள் நடைபெறத் துவங்கின. பாகிஸ்தானில் அதிக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு பின்னுள்ளவர்கள் யார்? அவர்கள் யாரும் வெளி நாட்டவர்கள் இல்லை; பாகிஸ்தானியர்கள்தான். இறந்தது யார்? இஸ்லாமியர்கள்தான்; வேறு ஒருவரும் இல்லை.

ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? அது சித்தாத்தங்களுக்கு இடையேயான சண்டை. எங்கெல்லாம் இத்தகைய சித்தாத்தங்களும், சகிப்புத்தன்மை அற்ற நிலையும் காணப்படுகிறதோ, அங்கு தீவிரவாதம் உருப்பெறும். சகிப்புத்தன்மை அற்ற மத ஆதரவானது என்றுமே  தீவிரவாதத்திற்கு வழிகோலும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.    

பாகிஸ்தானில் ராணுவ ஜெனரலாக இருந்து அதிரடி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ஜியா உல் ஹக், 1978 முதல் 1988 வரை 10 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com