காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் கேள்வி 

காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் கேள்வி 

காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

புது தில்லி: காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வாரத் துவக்கத்தில் தில்லியில் இஸ்லாமிய மத அறிஞர்கள் குழு ஒன்றைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சி என்று அவர்களிடம் கூறியதாக செய்தித்தாள் ஒன்றி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் முதலில் தெளிவுபடுத்தவேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மத ரீதியிலான பிளவுபடுத்தலுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். 

ராகுல் உள்ளிட்ட சில தலைவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள், பேச்சுக்கள் குறித்த செய்திகளை பார்க்கும் பொழுது, நாட்டின் பழைய கட்சியான காங்கிரஸ் மீண்டும் தனது பழைய கொள்கையான இந்தியாவை பிரித்தாளும் மனப்பான்மைக்கு சென்று விட்டதாக தோற்றம் உருவாகிறது.

முன்பெல்லாம் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாக அது இருந்தது. இப்பொழுது அது கட்சியின் பெயர் மற்றும் அடையாளமாகவே மாறி விட்டதாகத் தெரிகிறது.

ராகுலின் இந்த பேச்சு மற்றும் ஹிந்து பாகிஸ்தான் குறித்த சசி தரூரின் பேச்சு ஆகியவை காங்கிரசில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com