ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளை தாக்கிய கன மழை: மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை

ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், இந்த கன மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக இருப்பதும், ஒடிசாவில் இருந்து தமிழகம் நோக்கி கடற்காற்று வீசுவதாலும் ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்குக் கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதே போல, ராயலசீமா, கர்னூல், கடப்பா, அனந்தபுர் மற்றும் சித்தூர் பகுதிகளிலும் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடற்கரைப் பரப்பில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆந்திர கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com