நீதித்துறையில் புரட்சி தேவை: உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய்

சாமானிய மக்களுக்கும் பயன்படும் வகையில் நீதித்துறை செயல்பட வேண்டும் என்றால், இத்துறையில் சீர்திருத்தங்கள் தேவையில்லை; புரட்சிதான் தேவை என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோய்
நீதித்துறையில் புரட்சி தேவை: உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய்

சாமானிய மக்களுக்கும் பயன்படும் வகையில் நீதித்துறை செயல்பட வேண்டும் என்றால், இத்துறையில் சீர்திருத்தங்கள் தேவையில்லை; புரட்சிதான் தேவை என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
இப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-இல் ஓய்வு பெற இருக்கிறார். அதன் பிறகு ரஞ்சன் கோகோய் அப்பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ராம்நாத் கோயங்கா நினைவு மூன்றாவது ஆண்டு சொற்பொழிவு நிகழ்ச்சியில் நீதித்துறையின் சீரிய நோக்கங்கள்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
நமது நாட்டு மக்களின் கடைசி மற்றும் ஆதார நம்பிக்கையாக நீதித்துறை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களை முன்னின்று பாதுகாக்கும் காவலனாக நீதித்துறை செயல்பட்டு வருகிறது. சமுதாயத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக நீதித் துறை உள்ளது. சுந்திரமாக செயல்படும் நீதிபதிகளும், உரத்த குரல் எழுப்பும் பத்திரிகையாளர்களும்தான் ஜனநாயகத்தின் முதல் கட்ட காவலர்கள் என்று இண்டியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதே நேரத்தில் உரத்த குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமாக செயல்படும் பத்திரிகையாளர்களும் தேவை என்பது எனது கருத்து.
நாடு சுந்திரமடைந்த முதல் 50 ஆண்டுகளில் நீதிமன்றங்கள் உறுதியான தீர்ப்புகளை வழங்கின. ஆனால், இப்போது நாங்கள் கட்டுண்டுள்ளோம். நாட்டுக்காகவும், சாமானிய மனிதர்களுக்காகவும் பெரிதும் பயன்படும் வகையில் நீதித்துறை செயல்பட சீர்திருத்தங்கள் தேவையில்லை; இத்துறையில் மிகப்பெரிய புரட்சியே தேவைப்படுகிறது. நீதித்துறை இப்போது உளியில்லாத சிற்பியைப் போல உள்ளது. நாம் கூற வேண்டிதெல்லாம் கூறியாகிவிட்டது; ஆனால் யாரும் கேட்பதாக இல்லை. நாம் மீண்டும் அனைத்தையும் கூற வேண்டியதுதான்' என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் வாசகத்தைதான் இப்போது கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. மிகவும் தாமதமான செயல்பாடுகள்; செயல்திறன் குறைவு ஆகியவை நீதித்துறையின் நீண்டகால சவால்களாக உள்ளன. நீதி வழங்குதல் என்பது சமுதாயதத்தில் நல்ல விளைவுகளையும், சிறந்த மாற்றங்களையும் உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com