பிரெக்ஸிட் ஒப்பந்த அறிக்கை வெளியீடு: இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் சிக்கல்?

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான புதிய அறிக்கையை பிரிட்டன் வியாழக்கிழமை வெளியிட்டது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான புதிய அறிக்கையை பிரிட்டன் வியாழக்கிழமை வெளியிட்டது.
28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில் இருந்து 2019 மார்ச் 29-ஆம் தேதி பிரிட்டன் முறைப்படி முழுமையாக வெளியேறுகிறது. அதன் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார உறவுகள் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக இரு தரப்பும் பேச்சு நடத்தி முடிவுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக தற்போது புதிய அறிக்கை ஒன்றை பிரிட்டன் அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
பிரிட்டன் மக்களவையில் (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) இந்த விவகாரம் பிரச்னைக்கு உள்ளானது. இதனால், அவையை சிறிது நேரம் ஒத்திவைக்க நேரிட்டது.
இதில், ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வர விசா பெறத் தேவையில்லை என்பது உள்ளிட்ட சலுகைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பிரிட்டனைச் சேர்ந்தவர்களும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்ல இப்போதுள்ள நடைமுறைகளில் மாற்றம் இருக்காது. பணியாளர்கள் சென்று வருவதிலும் எவ்வித புதிய கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்? ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு அந்நாட்டுடன் இந்தியாவின் தொழில்-வர்த்தக உறவுகளை பெரிய அளவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இருந்தபோது நீடித்த பல்வேறு வர்த்தகத் தடைகள் நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால், ஐரோப்பிய யூனியனுடம் பெரிதும் நெருக்கம் காட்டும் வகையிலேயே பிரெக்ஸிட் ஒப்பந்த அறிக்கை அமைந்துள்ளதால், எதிர்பார்த்த அளவுக்கு இந்திய - பிரிட்டன் வர்த்தக ஒத்துழைப்பு மேம்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com