மத்திய பொதுப் பணித்துறை ஊழியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

மத்திய பொதுப் பணித்துறை ஊழியர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பொதுப் பணித்துறை ஊழியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

மத்திய பொதுப் பணித்துறை ஊழியர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பொதுப் பணித்துறையின் 164-ஆவது நிறுவன தினத்தையொட்டி, தில்லியில் அந்தத் துறை ஊழியர்களிடையே வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை பேசியதாவது:
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், அந்தத் துறையில் இருக்கும் இரு பிரச்னைகள் கவலை அளிக்கிறது. அதில் ஒன்று ஊழல். இது தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் பேசுவது சற்று வித்தியாசமாகத் தெரியலாம்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஊழலுக்கு எதிரான மிகப்பெரும் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி பேசுவது ஓர் உந்துதலாக இருக்கும். ஓர் அமைச்சராக, அதிகாரிகள் இடைநீக்கம் தொடர்புடையது உள்பட பல்வேறு கோப்புகளை பார்வையிட்டிருக்கிறேன்.
அதுபோன்ற நிகழ்வுகள் ஓர் அரசு நிர்வாக அமைப்புக்கான நல்ல அடையாளங்களாக இருக்காது. எனவே, நமக்குள்ளாக சுயபரிசோதனை செய்துகொண்டு மீண்டும் ஊழல் போன்ற இருளுக்குள் நாம் சிக்காமல் இருக்க வேண்டும்.
அதேபோல், பொதுப் பணித்துறையில் திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும் காலதாமதம் கவலைக்குறியது. அதைத் தவிர்க்க துறை ஊழியர்கள் பொறுப்புடனும், வெளிப்படைத் தன்மையோடும் செயல்பட வேண்டும். ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மத்திய பொதுப் பணித்துறையை சிறந்ததொரு அமைப்பாக மாற்ற வேண்டும். நாம் திட்டங்களை நோக்கி செயலாற்ற வேண்டுமே தவிர, தரவுத் தொகைக்காக அல்ல.
பொதுப் பணித்துறை பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள் ஆகியோர் அரசு திட்டங்களில் பசுமை அடிப்படையிலான முயற்சிகளை பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும். 
நீர் பாதுகாப்பு, மழை நீர் சேமிப்பு ஆகியவற்றை அரசின் எதிர்கால கட்டடங்களில் 
ஓர் அங்கமாக மாற்ற வேண்டும்.
தரத்தில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாமல், திட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். புத்தாக்க சிந்தனைகளையும், செயல்முறைகளையும் கையாள வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com