விசாகப்பட்டினத்தில் ரூ.3,685 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் கட்கரி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரூ.3,685.35 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை தொடங்கி
விசாகப்பட்டினத்தில் ரூ.3,685 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் கட்கரி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரூ.3,685.35 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
விசாகப்பட்டினம் துறைமுகத்தை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள அவர், விசாகப்பட்டினம் தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் நிறுவப்பட்டுள்ள சரக்குகளைக் கையாளும் 2 கிரேன்களை தொடங்கி வைக்கிறார். ரூ.150 கோடி செலவில் அந்த கிரேன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ரூ.580 கோடியில் மேம்படுத்தப்பட்ட இரும்புத் தாது கையாளும் வளாகத்தை கட்கரி திறந்து வைக்கிறார். மேலும், அந்த வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்து, 2,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக, ரூ.10.35 கோடியில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
பின்னர், பாரத்மாலா திட்டத்தின் கீழ், விசாகப்பட்டினம் துறைமுகத்தை இணைக்கும் 4 வழிச் சாலைத் திட்டத்துக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டுகிறார். ரூ.549 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதுதவிர, ஆனந்தபுரம்-அனகாபள்ளி இடையே ரூ.2,013 கோடியில் 6 வழிச்சாலை திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். 
இதுபோன்று மேலும் சில சாலைத் திட்டங்களை நிதின் கட்கரி தொங்கி வைக்கிறார் என்று விசாகப்பட்டினம் துறைமுகத் தலைவர் எம்.டி.கிருஷ்ண பாபு கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு வெள்ளிக்கிழமை இரவு நிதின் கட்கரி நாகபுரிக்குச் செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com