'ஹிந்து பாகிஸ்தான்' கருத்துக்கு சசி தரூரை ஒட்டுமொத்த இந்தியாவும் கண்டிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

'ஹிந்து பாகிஸ்தான்' கருத்துக்கு சசி தரூரை ஒட்டுமொத்த இந்தியாவும் கண்டிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் 'ஹிந்து பாகிஸ்தான்' உருவாகும் என்று கூறிய சசி தரூரை ஒட்டுமொத்த இந்தியாவும் கண்டிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் 'ஹிந்து பாகிஸ்தான்' உருவாகும் என்று கூறிய சசி தரூரை ஒட்டுமொத்த இந்தியாவும் கண்டிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக  மாற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இக்கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சசி தரூரின் இந்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சௌத்ரி என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக சசி தரூர் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், நாட்டின் இறையாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்துகளை அவமதிக்கும் விதமாகவும் சசி தரூரின் கருத்து அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்திய அரசியலமைப்பு சட்டம் 153ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகள் மற்றும் தேசிய அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ன் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வருகிற ஆகஸ்டு 14-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு கொல்கத்தா உயர் நீதிமன்றம், சசி தரூருக்கு சனிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:

சசி தரூர்-இன் இந்த கருத்தை மக்களின் நீதிமன்றம் தான் கண்டிக்க வேண்டும். ஹிந்து மற்றும் பாகிஸ்தானை இணைத்து கூறியதன் மூலம் நமது அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் சசி தரூர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார். 

இந்த கருத்துக்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க தவறினாலோ அல்லது அவரை கட்சியில் இருந்து நீக்கத் தவறினாலோ, மக்களாகிய நாம் தான் அதற்காக குரல் எழுப்ப வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com