பாலியல் புகார்: ஷாநவாஸ் ஹுசைன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் தடை

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்வதற்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை
பாலியல் புகார்: ஷாநவாஸ் ஹுசைன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் தடை

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்வதற்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஷாநவாஸ் ஹுசைனுக்கு எதிராக பாலியல் வழக்குப் பதிவு செய்யக் கோரி, தில்லி விசாரணை நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த அந்த நீதிமன்றம், பெண்ணின் புகாரில் முகாந்திரம் இருப்பதாகவும், ஷாநவாஸ் ஹுசைனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் கடந்த 7-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அமர்வு நீதிமன்றத்தில் ஷாநவாஸ் ஹுசைன் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மனுவை அமர்வு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி ஏ.கே.பதக் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷாநவாஸ் ஹுசைன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லுத்ரா, ஷாநவாஸ் மீதான பாலியல் புகார் அபத்தமானது; உண்மையில் ஷாநவாஸ் ஹுசைனின் சகோதரருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது, இந்தப் பிரச்னையில், ஷாநவாஸையும் இழுக்கிறார்கள்'' என்றார்.
இதையடுத்து, மனு மீதான அடுத்த விசாரணை வரை, அதாவது, டிசம்பர் 6-ஆம் தேதி வரை, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், ஷாநவாஸ் ஹுசைனின் மனு தொடர்பாக, குற்றம் சாட்டிய பெண்ணும், காவல் துறையும் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com