குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை: சுவாமி கிண்டல் 

குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் பதவியின் சுமை குறித்த குமாரசாமியின் பேச்சினை சுப்ரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.
குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை: சுவாமி கிண்டல் 

புது தில்லி: குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் பதவியின் சுமை குறித்த குமாரசாமியின் பேச்சினை சுப்ரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று முன்தினம் விழா ஒன்றில் பேசும் பொழுது, "தான் கர்நாடக முதல்வர் ஆனதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கர்நாடக மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், முன்னாள் பிரதமரான எனது தந்தையின் நிறைவேறாத செயல்திட்டங்களை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். ஆனால் ஒரு கூட்டணி அரசின் வலி என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.    கடவுள் சிவன் போன்று அந்த வலியினை நான் விழுங்கியுள்ளேன்" என்று கண்ணீர் மல்க பேசினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் பதவியின் சுமை குறித்த குமாரசாமியின் பேச்சினை சுப்ரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

மாநில முதல்வராக வேண்டும் என்ற குமாரசாமியின் கனவு நிறைவேறி விட்டது. ஆனால் ரொம்ப நாட்களுக்கு அவர் சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நிலை சீக்கிரம் மாறி சிக்கல்கள் எல்லாம் தீரும். அமித் ஷா என்னை கர்நாடகத்த்திற்குச் சென்று ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபடச் சொன்னால், மகிழ்ச்சியாகச் செய்வேன்.

இதர எதிர்கட்சிகள் யாரும் அத்துடன் இல்லாத காரணத்தால் காங்கிரஸ் இப்பொழுது தவிப்புடன் இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒரு நாள் கோவில்களுக்குச் செல்கிறார்கள்; மறுநாள் இஸ்லாமியர்களைச் சந்தித்து ஆதரிக்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறாரகள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com