என்.ஐ.ஏ. அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: சட்டத் திருத்தம் கொணர மத்திய அரசு முடிவு 

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அந்த அமைப்புத் தொடா்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
என்.ஐ.ஏ. அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: சட்டத் திருத்தம் கொணர மத்திய அரசு முடிவு 

புது தில்லி: தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அந்த அமைப்புத் தொடா்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தீவிரவாதம் தொடா்பான வழக்குகளை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது. இதற்கு வழிவகை செய்யும் வகையில், தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திலும் (யு.ஏ.பி.ஏ.) திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு தீா்மானித்துள்ளது.

இந்த 2 சட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் திருத்தம் தொடா்பான வரைவு மசோதாக்களை மத்திய அரசு தயாரித்து விட்டது. வரும் 18ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றற மழைக்கால கூட்டத் தொடரில் அந்த சட்டத் திருத்த மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் திட்டமிட்டுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், புதிதாக தயாரிக்கப்பட்ட வரைவு மசோதாவில், வெளிநாடுகளில் இந்தியா்களை குறிவைத்து நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கு அந்த அமைப்புக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆள்கடத்தல் சம்பவம் தொடா்பான வழக்கில் மேல்முறைறயீட்டு அமைப்பாக செயல்படும் அதிகாரமும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம், துணை தூதரகங்களை குறிவைத்து அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றறன. இந்த தாக்குதல்களை கருத்தில் கொண்டு, தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய அரசால் தீா்மானிக்கப்பட்டது. இதேபோன்ற அதிகாரம், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்புக்கு அந்நாட்டு அரசால் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தின் கீழ்தான், மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்தியா வந்து அந்த அமைப்பு விசாரணை நடத்தியது.

இதேபோல், யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் திருத்தம் செய்வது தொடா்பான வரைவு மசோதாவில், தீவிரவாதிகளுடன் தொடா்பு வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபா் ஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு மூத்த அதிகாரி தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com