அனைத்து கட்சிக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது: மத்திய அமைச்சர் அனந்த் குமார் தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றதாக மத்திய அமைச்சர் அனந்த் குமார், செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
அனைத்து கட்சிக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது: மத்திய அமைச்சர் அனந்த் குமார் தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றதாக மத்திய அமைச்சர் அனந்த் குமார், செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. இதுதொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், விஜய் கோயல், காங்கிரஸ் தலைவர்கள் அனந்த் ஷர்மா, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த உதவுமாறு மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் கூட்டத் தொடரில் விவாதிக்கவும், அதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறினார்.

மேலும், இந்த கூட்டம் சமூகமாக நடைபெற்றதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளிடமும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு, அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் முத்தலாக், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அரசியலமைப்பு அந்தஸ்து, திருநங்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டம், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவள்ளது. மேலும் பிகார், ஆந்திர மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து விவகாரம், நீட், ஒரே நேரத்தில் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com