உங்கள் மனம் அழுத்தமாக இருக்கிறதா? இதைப் பாருங்கள் நிச்சயம் லேசாகும்!

பல நோய்களுக்கு இடமாற்றமே நல்ல மருந்தாக அமையும். முன் காலத்தில் மலைப் பிரதேசங்களுக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள்.
உங்கள் மனம் அழுத்தமாக இருக்கிறதா? இதைப் பாருங்கள் நிச்சயம் லேசாகும்!

பல நோய்களுக்கு இடமாற்றமே நல்ல மருந்தாக அமையும். முன் காலத்தில் மலைப் பிரதேசங்களுக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள்.

இப்போதெல்லாம் அப்படியான மருத்துவர்களைப் பார்க்க முடிவதில்லை. தீர்க்க முடியாத நோய் என்று கூறி, பாக்கெட்டை தீர்த்து அனுப்புவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எப்போதும் வழக்கமான வேலைகளைச் செய்து வருவோரும் சரி, வீட்டில் நான்கு சுவறை சுற்றிச் சுற்றி வருவோருக்கும் சரி ஒரு அலுப்பு ஏற்படும். அப்போதெல்லாம் அவர்களை உற்சாகப்படுத்த ஏதேனும் ஒரு வெளிக்காரணியைத் தேடுவார்கள்.

சில சமயங்களில் கிடைக்கும். கிடைக்காமலும்  போகும். அது அந்தந்த சூழ்நிலையைப் பொருத்தது. எப்போதெல்லாம் மனம் கனமாக இருக்கிறதோ அப்போது இருக்கும் இடத்தில் ஒரு சின்ன மாற்றம், நண்பர்களை சந்திப்பது அல்லது உரையாடுவது, தங்களுக்குத் தேவையான ஒரு பொருளை வாங்குவது, வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பொருளை வாங்குவது போன்றவற்றில் ஈடுபடலாம்.

சில பாடல்களும், புகைப்படங்களும் ஏன் சினிமாக்கள் கூட உங்கள் மனநிலையை மாற்ற உதவலாம்.

அந்த வகையில் இமயமலையில் இருந்து இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் சில ரம்மியமான புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்ந்துள்ளோம்.

நிச்சயம் இது உங்கள் மனதை மயக்கும் என்று நம்புகிறோம்.

துள்ளி குதித்தோடும் மான்களின் கூட்டம்

அழகில் மான்களுடன் போட்டிபோடும் குதிரைகள்..

என்னடா நம்ம நண்பர்கள் எல்லாம் இங்கதான் இருக்காங்களா என்று கேட்டு சிரிக்க.. இந்த புகைப்படம்.

இது ஓவியமா என்று வியக்கும் வகையிலான மலைப் பகுதி. இது ஓவியம்தான்.. பூமியில் இறைவன் வரைந்த ஓவியம்.

மலைப் பகுதி என்றுமே ரம்மியம்தான். அதிலும் இது பற்றி சொல்ல வேண்டுமா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com