அதிகாரிகளுக்கு வீட்டு வேலை செய்வது எங்களது பணியல்ல: அமைச்சருக்கு இருப்புப் பாதை ஊழியர் கடிதம்

காலம் காலமாக தன்னைப் போன்ற அடிமட்ட ரயில்வே ஊழியர்கள், உயரதிகாரிகளின் வீட்டில் "கொத்தடிமைகளை'ப் போல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
அதிகாரிகளுக்கு வீட்டு வேலை செய்வது எங்களது பணியல்ல: அமைச்சருக்கு இருப்புப் பாதை ஊழியர் கடிதம்

காலம் காலமாக தன்னைப் போன்ற அடிமட்ட ரயில்வே ஊழியர்கள், உயரதிகாரிகளின் வீட்டில் "கொத்தடிமைகளை'ப் போல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில்வே ஊழியர் ஒருவர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வடக்கு மாகாண ரயில்வேயில் பணியில் இணைந்த, லக்னெüவைச் சேர்ந்த தர்மேந்திர குமார் என்பவர்அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள புகார்க் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

ரயில்வேயில் 4-ஆம் நிலை அலுவலராகப் பணியில் இணைந்த என்னைப் போன்ற பல ரயில்வே ஊழியர்கள், தற்போது உயரதிகாரிகளின் வீட்டு வேலைக்காரர்களாக உள்ளனர். 

தினமும் இருப்புப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய என்னையும், மேலும் 5 ஊழியர்களையும், பிரிவுப் பொறியாளரான ராஜ்குமார் வர்மா, உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அவரது வீட்டில், கடந்த ஒரு மாத காலமாக வீடு கட்டும் தொழிலாளர்களாக வைத்துள்ளார். 

வேலை செய்ய மறுத்தால், எங்களைப் பணியில் இருந்து நீக்கிவிடுவதாகவும் அவர் மிரட்டி வருகிறார். இது குறித்து உயரதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் எங்களுக்கு சாதகமாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாங்கள் இங்கு வேலை செய்து வருவதைக் காணொளிப் படமாக எடுத்து, இக்கடிதத்துடன் இணைத்துள்ளோம். 

நாங்கள் இந்திய ரயில்வேக்கு மட்டுமே வேலை செய்ய விரும்புகிறோம்; வேறு எவருக்கும் வேலை செய்ய மாட்டோம். எனவே இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குமார் தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போது அவர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதாகவும், தொழிலாளர்களாக வேலை செய்ய மறுக்கப்பட்ட நாளிலிருந்து, வருகைப்பதிவு வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் குமார் குற்றம் சாட்டினார். 

இது குறித்து கருத்து தெரிவித்த வடக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் நிதின் செüதரி, இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளாதகாவும், புகார் உறுதிபடுத்தப்பட்டால், தவறிழைத்தோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com