ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வியாழக்கிழமை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வியாழக்கிழமை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், அந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த குற்றப்பத்திரிகையை, வரும் 31-ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. சட்ட விதிகளின்படி, ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சரின் ஒப்புதல் போதுமானதாகும். ரூ.600 கோடிக்கும் அதிகமான முதலீட்டுத் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
ஆனால், அந்தக் குழுவின் ஒப்புதலைப் பெறாமல், ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்வதற்கு கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறவும் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக, சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் மறுத்து வருகின்றனர்.
சிபிஐக்கு நெருக்கடி- ப.சிதம்பரம்: இதனிடையே, என் மீது சுமத்தப்பட்டுள்ள அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது' என்று ப.சிதம்பரம் கூறினார். வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால், மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க இயலாது. என் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் பதிலளிப்பேன்' என்றும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com