ராஜஸ்தானில் மக்களை திரட்ட தவறுகிறதா காங்கிரஸ்? 

ராஜஸ்தானில், சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் இடையிலான மனக்கசப்பு வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் அக்கட்சி மக்களின் ஆதரவை திரட்ட தவறுவதாக கூறப்படுகிறது. 
ராஜஸ்தானில் மக்களை திரட்ட தவறுகிறதா காங்கிரஸ்? 

ராஜஸ்தானில், சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் இடையிலான மனக்கசப்பு வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் அக்கட்சி மக்களின் ஆதரவை திரட்ட தவறுவதாக கூறப்படுகிறது. 

ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த கட்சியில் தற்போது மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைல்ட் மற்றும்  மாநில  முன்னாள் முதல்வர் அஷோக் கெலாட் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்களது ஆதரவாளர்கள் இடையில் இருக்கும் பிரச்னை, வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். இந்த கட்சியில் இருக்கும் இந்த பிளவு காரணத்தால், சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் பல இடங்களில் காங்கிரஸ் மக்களை திரட்டும் அரிய வாய்ப்புகளை தவறவிட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றிகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் வெற்றிகளுக்கு சச்சின் பைலட் முக்கிய காரணம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதற்கு இணையாக, கட்சியின் பாராட்டுக்குரிய செய்ல்பாடுகளில் அஷோக் கெலாட் மிக முக்கிய பங்காற்றினார் என்று அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் அஷோக் கெலாட்டுக்கு ராகுல் காந்தி காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியை வழங்கினார். அதனால், காங்கிரஸ் கட்சியில் அவர் நற்பெயரை மதிப்பையும் பெற்றார். 

காங்கிரஸ் கட்சியின் மூலம் கிடைத்த சில தகவல்களின் படி, கட்சியில் அஷோக் கெலாட்டின் வளர்ச்சிக்கு பதிலடி தரும் வகையில், 'எனது பூத், எனது பெருமை' என்ற  பிரச்சார யுத்தியை சச்சின் பைலட் அறிவித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம், காங்கிரஸின் கள தொண்டர்கள் வரை ஈர்த்து தேர்தல் பிரச்சார பணிகளை சச்சின் பைலட் துரிதப்படுத்தினார்.

இந்த நிகழ்வை குறிப்பிட்டு, "பாஜக புதிய தலைவரை தேடிக் கொண்டிருக்கும் நிலையில், நான் 195 தொகுதிகளை கடந்துவிட்டேன்" என்று சச்சின் பைலட் தெரிவித்தார். மறுமுனையில், அஷோக் கெலாட்டும் "நான் எங்கும் செல்ல மாட்டேன். எனது கடைசி மூச்சு உள்ளவரை நான் மக்களுக்காக உழைப்பேன்"  என்று உரக்கச் சொல்கிறார். 

தேர்தல் வர இன்னும் 3 முதல் 4 மாதங்களே உள்ள நிலையில், ராஜஸ்தானில்  காங்கிரஸ் கட்சியினர் இப்படி பிளவுடன் பணியாற்றி வருவது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதன் விளைவு தேர்தல் முடிவுகளில் தான் வெளிவரும். 

இந்த பிளவினால் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தவறவிட்ட மக்களை திரட்டும் அரிய வாய்ப்புகள்,

  • ஆளும் பாஜகவுக்கு எதிரான வியூகங்களை திட்டமிட காங்கிரஸ் தவறியுள்ளது. 
  • மாநில அரசின் தோல்விகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது. 
  • ராஜஸ்தான் மாநிலம் ஷேகாவதியில், 4 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அங்கு தென்படவே இல்லை.
  • தாங்கவாஸில் 11 தலித் சமூகத்தினர் கொலை செய்யப்பட்டனர். அப்போதும் காங்கிரஸ் கட்சி மௌனம் காட்டியது.
  • கடந்த ஆண்டு ஆழ்வார் பகுதியில் மாடு கடத்துவதாக கூறி பெஹ்லூ கான் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்து வாக்காளர்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் காங்கிரஸ் இந்த விவகாரத்திலும் மௌனம் காத்தது.
  • அதேசமயம், ஊடக சுதந்திரத்துக்கு எதிராக ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் குரல் எழுப்பவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com