28-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம்: 30 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு

28-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் புது தில்லியில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
28-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம்: 30 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு

28-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் புது தில்லியில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் வரி சீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது. ஜிஎஸ்டி வரித் தாக்கல் முறையை மேலும் எளிதாக்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் முதன்முறையாக நடைபெறும் இக்கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஜிஎஸ்டி வரி தாக்கலை எளிமையாக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. அவ்வகையில் ஆண்டுக்கு ஒருமுறை வரிதாக்கல் முறையை ஏற்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும் அதனை இந்தாண்டு இறுதிக்குள் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் முக்கியப் பயன்பாட்டுப் பொருட்களான நாப்கின், கைத்தறிகள் மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட 30 பொருட்களின் மீதான வரியை குறைத்து அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றார். கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரியை 12%இல் இருந்து 5% ஆக குறைக்க வேண்டும். விவசாயம், கூட்டுறவு வங்கி, கல்வி நிறுவன சேவைகளுக்கு வரிகுறைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அமைச்சர் ஜெயகுமார் முன்வைத்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com