ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்

மக்களவையில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.
ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்

மக்களவையில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது:
மக்களவையில் ராகுல் காந்தியின் செயல், சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. அவருக்கு வயது அதிகரித்துள்ளபோதிலும், அதற்குரிய வளர்ச்சி அவரிடம் காணப்படவில்லை. மேலும், போதிய விவரங்களை அறியாதவராகவும், பக்குவமில்லாதவராகவும் உள்ளார். பிரதமர் மோடியை அவர் கட்டியணைத்தது ஏற்கும்படியாக இல்லை.
நாடாளுமன்ற விதிகளின்படி, அவையின் எந்தவொரு உறுப்பினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் முன்பாக, நோட்டீஸ் அளிக்க வேண்டும். மேலும், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் அவைத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி, அவை தவறாக வழிநடத்தியதற்காக, ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவுள்ளனர் என்றார் அவர்.
பின்னர், மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
முன்னதாக, மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது,  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடியின் நெருக்கடிக்கு பணிந்து அவர் இதைத் செய்துள்ளார். முதலில், போர் விமானங்களின் விலை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிப்பதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், பின்னர், அந்த விவரங்களை வெளியிடக் கூடாது என்று பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவருக்கே, ரஃபேல் விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீததாராமன் உடனடியாகப் பதிலளித்தார். அவர், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் ( 2008), இந்தியா-பிரான்ஸ் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களும் அடங்கும்'' என்று பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com