50 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து: ஹிமாசலப் பிரதேச மலைப் பகுதியில் விமான பாகங்கள் கண்டெடுப்பு

ஹிமாசலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் 50 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களும், வீரரின் சிதைந்த உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஹிமாசலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் 50 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களும், வீரரின் சிதைந்த உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 மலை உயரத்தில் சுற்றுலா மற்றும் பயணம் மேற்கொள்பவர்கள் விட்டு செல்லும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக இந்திய மலையேறும் அமைப்பு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் இணைந்து சுத்தப்படுத்தும் பணியை செய்து வருகிறது.
 சந்தரபாகா-13 சிகரத்தில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக மலையேறும் குழுவினர் மேற்கொண்ட பயணத்தின்போது சிதைந்த உடலையும் விமானத்தின் பாகங்களையும் கண்டுள்ளனர்.
 இதுகுறித்து உத்தரகாசியில் இருந்து மலையேறும் அணியை வழிநடத்தி சென்ற ராஜீவ் ராவத் கூறுகையில்,
 "கடல் மட்டத்திலிருந்து 18,000 அடி உயரத்தில் உள்ள டாகா பனிப்பாறை அருகே விமானத்தின் பாகங்களையும், வீரரின் சிதைந்த உடலையும் பார்த்தோம். விபத்து நடந்து 50ஆண்டுகள் ஆகியும் விமானியின் முடி மற்றும் கை அப்படியே இருந்தது.
 நாங்கள் ஜூலை 11 அன்றே விமானத்தின் பாகங்களை பார்த்து விட்டோம். கீழே இறங்கி வந்ததும், ஜூலை 15 அன்று இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். மலை உயரத்தில் பனிப்பொழிவு குறைந்து வருகிற காரணத்தால், பனிக்கு அடியில் பல காலமாக புதையுண்ட பொருள்கள் மேற்பரப்பில் தெரிந்திருக்கலாம். விமானம் மற்றும் உடலின் பாகங்கள் 2-2.5 கி.மீ வரை பரவியிருக்கலாம்' என்றார்.
 அந்த விமானம் கடந்த 1968-ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான விமானம்தான் என்பது எப்படி தெரிய வந்தது? என்ற கேள்விக்கு, "நாங்கள் அங்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்த போது, விமானம் விபத்துக்குள்ளானது பற்றி அறிந்து கொண்டோம்' என்றார் .
 கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி இந்திய விமான படைக்கு சொந்தமான ஏஎன்-12 விமானம், லே இருந்து சண்டீகருக்கு சென்றது. மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் புறப்பட்ட இடத்துக்கே வந்து கொண்டிருந்த போது காணாமல் போனது. ஹிமாசலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com